எழுநா
எழுநா

எழுநா

Ezhuna

Overview
Episodes

Details

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது. ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, கலை, மானுடவியல், அரங்கியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது பொருளாதாரம், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டுப் பரப்புக்களாக அமைகின்றன.

Recent Episodes

அறிமுகம் | ஈழத்துப் பதிப்பாசிரியர்களும் பதிப்பு முறைகளும் | இளஞ்செழியன் சண்முகம்
MAY 29, 2025
அறிமுகம் | ஈழத்துப் பதிப்பாசிரியர்களும் பதிப்பு முறைகளும் | இளஞ்செழியன் சண்முகம்
பண்டைய தமிழர்கள் பனைஓலைகளை எழுத்து ஊடகமாகப் பயன்படுத்தினர். காலப்போக்கில் ஓலைச்சுவடிகள் பழுதடைந்த காரணத்தால், அவை படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. அச்சு ஊடகங்கள் தோன்றியபிறகு, பழந்தமிழ் நூல்கள் அச்சாக வெளியிடப்பட்டன. இதற்காகப் பல பதிப்பாசிரியர்கள் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து, பாடவேறுபாடுகளைக் கவனித்து, மூலபாடங்களை நிலைநாட்டி, பதிப்புப் பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக ஈழத்துப் பதிப்பாசிரியர்கள், பதிப்புத்துறையில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்கள் பதிப்பித்த நூல்கள் இலக்கியம், இலக்கணம், இசை, சோதிடம், தருக்கம், வைத்தியம், வரலாறு போன்ற பலதுறைகளை உள்ளடக்கியவை. சுவடிகளின் குறியீடுகளை அடையாளம் காணும்திறன், பாட வேறுபாடுகளை அலசும் திறமை, மூலபாடத்தை உறுதிப்படுத்தும் திறமை போன்றவை இவர்களிடம் இருந்தன. இத்தகைய ஈழத்துப் பதிப்பாசிரியர்கள் பதிப்பித் நூல்களில் அவர்கள் கையாண்ட பதிப்பு உத்திகள், நெறிமுறைகள் குறித்து ஆராய்வதாக ‘ஈழத்துப் பதிப்பாசிரியர்களும் பதிப்பு நெறிமுறைகளும்’ எனும் இத்தொடர் அமையவுள்ளது.
play-circle icon
17 MIN
வடக்கு - கிழக்கு மாகாணங்களின் சமூக நலத்துறையும் அவற்றின் பொருளாதார ரீதியிலான பங்களிப்பும் | வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும் | அமரசிங்கம் கேதீஸ்வரன்
MAY 27, 2025
வடக்கு - கிழக்கு மாகாணங்களின் சமூக நலத்துறையும் அவற்றின் பொருளாதார ரீதியிலான பங்களிப்பும் | வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும் | அமரசிங்கம் கேதீஸ்வரன்
ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள் தொடர்பாக தெளிவுடுத்துவதாகவும், அந்த வளங்களின் இப்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல், அதனூடே வடக்கு – கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு, கடல்சார் பொருளாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் விளக்குகின்றது.
play-circle icon
13 MIN
காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் - பகுதி 2 | இலங்கையின் அரசியல் 1981 - 1900: பன்முகநோக்கு | ஆங்கில மூலம் : குமாரி ஜெயவர்த்தன | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்
MAY 23, 2025
காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் - பகுதி 2 | இலங்கையின் அரசியல் 1981 - 1900: பன்முகநோக்கு | ஆங்கில மூலம் : குமாரி ஜெயவர்த்தன | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்
‘இலங்கையின் அரசியல் 1981 – 1900: பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1981 முதல் 1900 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.
play-circle icon
30 MIN
போரின் பின்னரான அறம் : பறைதலும் பாடுதலும் | சமகாலத்தைப் பொருள்கொள்ளல் : கவனம்பெறா அசைவியக்கங்கள் | மீநிலங்கோ தெய்வேந்திரன்
MAY 23, 2025
போரின் பின்னரான அறம் : பறைதலும் பாடுதலும் | சமகாலத்தைப் பொருள்கொள்ளல் : கவனம்பெறா அசைவியக்கங்கள் | மீநிலங்கோ தெய்வேந்திரன்
இலங்கையின் சமகாலச் சூழலில் மூன்று விடயங்கள் தவிர்க்கவியலாமல் செல்வாக்குச் செலுத்துகின்றன. முதலாவது மூன்று தசாப்தகால யுத்தம்; இரண்டாவது போரின் முடிவின் பின்னரான இயங்கியல்; மூன்றாவது பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும். இவை மூன்றும் தன்னளவிலும், இலங்கைச் சமூகத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் அனைத்தும் கவனிக்கப்படவுமில்லை, கருத்தில் கொள்ளப்படவுமில்லை. சமகாலத்தைப் பொருள்கொள்ளல் என்பது வெறுமனே அன்றாடக் கதையாடல்களுக்குரியவற்றுடனோ அல்லது பொதுப்புத்தியில் எப்போதும் நிலைத்திருக்கும் விடயப்பரப்புகளுடனோ மட்டும் நின்றுவிடுவதல்ல. இலங்கைச் சமூகப் படிநிலையில் நலிந்தோரின் கதைகள் சொல்லப்பட வேண்டும்; அதுசார் வினாக்கள் எழுப்பப்பட வேண்டும். இலங்கையின் சமகாலம் குறித்த பெரும்பான்மையான எமது உரையாடல்கள் கவனம் குவிக்கத் தவறும் விடயங்களையும் அமைதியாகக் கடந்து செல்லும் களங்களையும் ‘சமகாலத்தைப் பொருள்கொள்ளல்: கவனம்பெறா அசைவியக்கங்கள்’ எனும் இத்தொடர் பேசமுனைகிறது.
play-circle icon
20 MIN