Description
<p>வந்தியத்தேவனை படகில் வீற்றிருந்த அரசிளங்குமரி குந்தவையிடம் விட்டுவிட்டு ஆழ்வார்க்கடியான் வந்தவழியாக திரும்பிச் செல்கிறான். ஓடத்திலிருந்த இளவரசியின் முகத்தைப் பார்த்த வந்தியத்தேவன் தன்னையே மறந்து நிற்கிறான். குந்தவை, வந்தியத்தேவனிடம் போன காரியம் என்ன ஆயிற்று என்று வினவுகிறாள். அச்சமயம் பயங்கரமான சத்தம் கேட்டு அரசிளங்குமரியும், வந்தியத்தேவனும் சத்தம் வந்த திசையை நோக்குகிறார்கள்.</p>