பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 21 "நீயும் ஒரு தாயா?"
சோழ நாட்டின் பாரத்தை கண்டராதித்த தேவர் வகிக்கும்படியாக நேர்ந்த கதையும், சுந்தர சோழர் இளவரசுப் பட்டம் கட்டிய கதையும், சுந்தர சோழரின் சந்ததியர்கள் சோழ நாட்டை ஆண்டு வரவேண்டும் என்ற வாக்கையும் செம்பியன் தேவி கூறுகிறார். பிறகு சோழ குலத்துச் சிம்மாசனத்தில் மதுராந்தகன் ஏற ஆசை கொண்டதைப் பற்றி கேள்வி கேட்கிறார். மதுராந்தகன் சோழ சாம்ராஜ்யத்தில் மிகச் செல்வாக்கு வாய்ந்த சிற்றரசர்களும், பெருந்தரத்து அதிகாரிகளும், பழுவேட்டரையர்களும் தன் பக்கம் இருப்பதை தாயிடம் கூறுகிறான். இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, அரண்மனை வாசலில் ஆரவாரம் கேட்டு பெருமூதாட்டி விஷயம் தெரிந்து வர செல்கிறாள்.