<p>கண்ணைத் திறக்க முடியாத வானதி, குந்தவை தேவியும், குடந்தை ஜோதிடர் வீட்டில் பார்த்த வாலிபரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்கிறாள். இளவரசர் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் இருக்கிறார் என்ற செய்தியை வானதி கேட்கிறாள். இராஜ்யம் ஆளப்பிறந்தவர்கள் இராஜ குலத்திலே பிறந்தவரை கலியாணம் செய்ய வேண்டும் என்று குந்தவை வந்தியத்தேவனிடம் விவாதம் செய்கிறாள். வானதி கண் விழிக்கும் சமயத்தில் ஆழ்வார்க்கடியான் அங்கு பிரவேசிக்கிறான்.</p>